அரசாங்க வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை மாலை 4.30 மணிக்கு பின்னரும் திறந்து வைத்திருக்கும் திட்டம் டிசெம்பர் முதலாம் திகதியிலிருந்து விநியோக மற்றும் ஆளணி பிரச்சினைகளை தீர்த்தபின்பு கட்டம்கட்டமாக அமுல்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பொதுவைத்தியசாலைகள் மற்றும் போதனா வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுடன் தான் கலந்துரையாடியதாக, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு கால அவகாசம் வழங்குவதற்கு நான் இணங்கினேன். அவர்கள் வெளிநோயாளர் பிரிவுகளை மாலை 4.30 இற்குப் பின்னர் மேலும் இரு மணித்தியாலங்கள் திறந்து வைத்திருக்க விரும்பினார்கள்.
இதன்படி மாலை 6.30 மணிவரை வெளிநோயாளர் பிரிவுகள் திறந்திருக்கும். இந்த இரு மணித்தியால நீடிப்பின் வெற்றியை மதிப்பீடு செய்தபின் மாலை 6.30 மணிக்குப் பின்னரும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை திறந்திருப்பது குறித்து ஆராயப்படும்' என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை போதிய ஆளணி மற்றும் விநியோக வசதிகளை அமைச்சு வழங்கினால் மாலை 4.30 மணிக் குப் பின்னர் வெளிநோயளர் பிரிவுகளை திறந்திருப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சந்திக்க எபிட்டகடுவ கூறியுள்ளார்.
இது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக, மேற்படி சங்கத்தின் மத்திய குழு நவம்பர் 14 ஆம் திகதி சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’