வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 நவம்பர், 2010

60 வருடகால தமிழ் மக்கள் போராட்டத்தின் இலக்கு இணைந்த மாகாணமாகும்-த.தே.கூ

60  வருடங்களாக தொடரும் தமிழ் மக்களின் போராட்டத்தின் இறுதி இலக்கு எந்தவித அதிகாரங்களுமில்லாத மாகாண சபையல்ல. வடகிழக்கு இணைந்த மாகாணத்திற்குள் நிரந்தர தீர்வு என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கு இணைந்தால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரே முதலமைச்சராக வருவார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அரியநேத்திரன் எம்.பி.யினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது 'இணைந்த மாகாணத்திற்குள் யார் வேண்டுமானாலும் அதிகாரத்திற்கு வரலாம். அது முஸ்லிமாக இருந்தாலும் சரி, தமிழ் பேசும் சமுகத்ததைச் சேர்ந்தவராக இருந்நதால் சரி. எந்தத்தீர்வாக இருந்நாலும் இணைந்த வடகிழக்கிற்குள் இருக்கவேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நி;லைப்பாடாகும்.
முதலமைச்சரின் கருதின்படி மாகாண சபைதான் இறுதித்தீர்வாக கொள்ளப்படுகின்றது. மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டதே வடகிழக்கு மக்களுக்காகத்தான். ஆனால் இன்று ஏனைய மாகாண சபைகளும் உருவாக்கப்பட்டு எந்தவித அதிகாரங்களுமின்றி வெறும் பொம்மைகளாக காணப்படுகின்றன. எனவே மாகாண சபை தமிழ்பேசும் மக்களின் இறுதித் தீர்வல்ல.
இணைந்த வடகிழக்கிற்குள் காணப்படும் அதிகாரத்துடனான தீர்வே இறுதித்தீர்வாகும். இந்நிலையில் எந்தவித பிரதேச பாகுபாடுகளும் எமக்கு கிடையாது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’