வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 நவம்பர், 2010

அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9!

ஹைதராபாத் டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 436 ரன்கள் எடுத்தது. சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அசத்தலாக அடித்து 85 ரன்கள் சேர்த்ததாலேயே இந்த ஸ்கோரை இந்தி்யாவால் எட்ட முடிந்தது
.இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன் எடுத்தது. மெக்ன்டோஷ் 102 ரன்னும், குப்தில் 85 ரன்னும், ரைடர் 70 ரன்னும் எடுத்தனர்.

ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் சதத்தை தவறவிட்டார். 96 ரன்னில் அவுட்டானார். டிராவிட் 7 ரன்னிலும், தெண்டுல்கர் 11 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினர். ஆனால் தெண்டுல்கர் ஏமாற்றம் அளித்தார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அவர் வெட்டோரி பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 13 ரன்களே எடுத்தார். 50-வது சதத்தை ஆடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அவர் மீது இருந்தது. அப்போது இந்தியாவின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 184 ரன்னாக இருந்தது.

4-வது விக்கெட்டுக்கு டிராவிட்டுடன், லட்சுமண் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி பொறுப்புடனும், நிதானத்துடனும் ஆடியது. 59.2-வது ஒவரில் இந்திய அணி 200 ரன்னை தொட்டது.
மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்து இருந்தது. டிராவிட் 33 ரன்னிலும், லட்சுமண் 31 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். சிறிது நேரத்தில் லட்சுமண் அரை சதம் அடித்தார். பொறுப்புடன் விளையாடி வந்த டிராவிட் சவுத்தி வீசிய ஓவரில் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 45 ரன் எடுத்தார்.
அடுத்து வந்த ரெய்னா 20 ரன்னிலும், டோனி 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மிகவும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்ட லட்சுமண் மார்ட்டின் வீசிய பந்தில் எதிர்பாராத விதமாக எல்.பி.டபிள்யூ ஆனார் (74).
பின்னர் வந்த ஹர்பஜன்சிங்கும், ஜாகீர்கானும் பொறுப்புடன் விளையாடினர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்க்கு 436 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் சிங் 85 ரன்களுடன் ஆடிக் கொண்டுள்ளார். 82 பந்துகளில் அவர் இந்த ஸ்கோரை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள 9வது அரை சதம் இது. நாளை செஞ்சுரி அடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர். மறுமுனையில் ஸ்ரீசாந்த் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
நியூஸிலாந்து பவுலர் டேனியல் வெட்டோரி 123 ரன்கள் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிம் சௌத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’