வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 நவம்பர், 2010

விக்கிலீக்ஸில் இலங்கை தொடர்பான 3166 இரகசிய ஆவணங்கள்

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் வசமுள்ள 251,287 அமெரிக்க இராஜதந்திர இரகசிய ஆவணங்களில் 3000 இற்கும் அதிகமானவை இலங்கை தொடர்பானவையாகும்.

இவற்றில் சீனா தொடர்பான 8320 ஆவணங்களும் ஆப்கானிஸ்தான் தொடர்பாக 7095 ஆவணங்களும் இந்தியா தொடர்பாக 5087 ஆவணங்களும், பாகிஸ்தான் தொடர்பாக 4775 ஆவணங்களும் இலங்கை தொடர்பாக 3166 ஆவணங்களும் பங்களாதேஷ் தொடர்பாக 2182 ஆவணங்களும் அடங்கியுள்ளன.

இவற்றில் 220 ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள் முன்னொப்போதுமில்லாத வகையில் அமெரிக்க அரசாங்கத்தின் வெளிவிவகார செயற்பாடுகள் தொடர்பான உள்தகவல்களை உலக மக்களுக்கு வழங்குகின்றன என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்த ஆவணங்கள் 1996 முதல் 2010 ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்;களத்திற்கும் 274 தூதரகங்களுக்கும் இடையிலான இரகசிய தகவல்தொடர்புகள் சம்பந்தப்பட்டவை எனவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
மேற்படி 251287 ஆவணங்களில் 3325 ஆவணங்கள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்தும் காத்மண்டிலிருந்து 2278 ஆவணங்களும் இஸ்லாமாபாத்திலிருந்து 2220 ஆவணங்களும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’