வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 நவம்பர், 2010

பிரபாகரன் கூறியது போன்று மக்கள் இன்று நடப்பதை 2 வாரங்களில் மறந்து விடுகின்றனர் : கரு

விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியது போல் எமது மக்கள் இன்று நடப்பதை இன்னும் இரண்டு வாரங்களில் மறந்து விடும் போக்குக் கொண்டவர்களாகவே உள்ளனர். கடந்த பொதுத் தேர்தலின் போது நாம் கூறியவை சிலருக்கு இன்று மறந்து விட்டது. அதன் பிரதிபலனாக இன்றைய அவலத்தை ஒவ்வொருவரும் சந்திக்கவேண்டி வந்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சயின் ; பிரதித் தலைவரும் நாடாளுமன்ற அங்கத்தவருமான கரு ஜயசூரிய இன்று கண்டியில்; வைத்துத் தெரிவித்தார்.

ஐ.தே.க.மேற்கொண்டு வரும் ‘கிராமத்திற்குக் கிராமம்’, மற்றும் ‘கிராம சஞ்சாரம்’ முதலிய பிரசாரத் திட்டங்களின் கீழ் இன்று மாலை கண்டிப் பகுதியில் இடம்; பெற்ற மக்களை விழிப்படையச் செய்யும் கூட்டமொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த தேர்தலின் போது பல்வேறு; துறை சார்ந்தவர்களை அழைத்து அரச ஊழியர்களுக்கு 3500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க முடியும் என்பதை அறிவித்தோம். அது எம்மால் செய்யக் கூடிய ஒன்று.
ஆனால் தற்போதைய அரசு அன்று என்ன கூறியது ? அவர்கள் இன்று கூறுவது என்ன? இவையெல்லாம் உங்களுக்கு மறந்து விட்டது. இதைத்தான் வே. பிரபாகரனும் கூறினார். முப்பது வருட கொடுர யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வர பங்களிப்புச் செய்தவர்கள் பலருண்டு. இவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கினாhர். இதைவிட பல்வேறு தளபதிகள் பொதுமக்கள் யுத்தவீரர்கள் என பெரும் தொகையினர் பங்களிப்புச் செய்தனர். இவர்கள் அனைவரையும் விட அதிக பங்களிப்புச் செய்தவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவாகும்.
அவரது நெஞ்சுப் பகுதியில் ஐந்து தோட்டாக்களின் பகுதிகள் உண்டு. அவரது குடலில் பல மீற்றர் நீளம் அகற்றப் பட்டுள்ளது. அவருடைய வயிற்றுப் பகுதியை பாhத்தவர்களுக்கு இது புரியும். அவர் உயிரையே பணயம் வைத்து வேறு எவருக்கும் மீண்டும் யுத்தம் செய்ய இடம் வைக்க மாட்டடேன் என்று கூறி யுத்தத்தை முடித்தார். அவருக்கு வழங்கப் பட்ட பரிசு என்ன? ஒரு யுத்த வீரன் தனது சேவைகாலத்தின் மிகப் பெறுமதியாக மதிக்கும் விருதுகள் பதக்கங்கள் பறிக்கப் பட்டன.
ஆனால் தற்போது பொன்சேகா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். வைத்திய ஆலோசனைப் படி அவருக்கு வழங்க வேண்டிய வசதிகள் இல்லை. சுத்தமான காற்றை சுவாசிக்கும் நிலை கூட இல்லை.
கடந்தவாரம் ஒரே நாளில் மூன்று வழக்குகள். இது ஒருதனி மனிதனால் தாக்குப் பிடிக்க முடியாதது. இதையடுத்தே மறு நாள் அவர் கடும் சுகவீனமுற்றார்.
இவற்றிற்குக் காரணம்அவர் தேர்தலில் போட்டியிட்டது வாகும். இவைதான் இன்றைய அராஜகமாகும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’