இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க இதுவே சரியான தருணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்
.அத்துடன், தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா அளித்துள்ள நிதி எந்த விதத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் போரினால் பாதிக்கப்பட்ட வட - கிழக்குப் பகுதிகளின் புரனமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆலோசனை நடத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுநலவாய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக புதுடில்லிக்குப் பயணமாகியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளதாக மேற்படி செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது, முகாம்களில் எஞ்சியுள்ள தமிழ் மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்துமாறும் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் குடியேற்றம் குறித்து பார்வையிட இம்மாத இறுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’