சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிக்கா ஜேன்ஸின் குறிப்பேட்டுப் புத்தகத்தில் சில பக்கங்களில் வித்தியாசம் காணப்படுவதாக சட்டத்தரணி நலின் லந்துவேஹெட்டி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளைக் கொடி ஏந்திய புலி உறுப்பினர்களை சுட்டுக் கொன்றதாக சரத் பொன்சேகா தெரிவித்ததாக, சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் நடைபெற்றது.
அதன் போது பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிக்காவின் குறிப்பேட்டுப் புத்தகத்தின் சில பக்கங்களில் வித்தியாசம் காணப்படுவதாக சட்டத்தரணி, பெட்ரிக்கா ஜேன்ஸூம், நீதவான்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
குறித்த குறிப்பேட்டுப் புத்தகத்தில் சரத் பொன்சேகாவுடனான செவ்வி தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சில முக்கிய பக்கங்களின் நிறம் மற்றும் நிறை என்பனவற்றில் வேறுபாடு காணப்படுவதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில பக்கங்கள் ஏனைய பக்கங்களுடன் ஒத்துப் போகவில்லை என பிரதம நீதவான் தீபாலி விஜேசுந்தரவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் குறிப்பேட்டுப் புத்தகம் புலனாய்வுப் பிரிவினடரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சரத் பொன்சேகாவிற்கு பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக சண்டே லீடர் பத்திரிகை மதாந்தம் பத்து லட்ச ரூபாவினைப் பெற்றுக் கொண்டதாக சட்டத்தரணி லந்துவேஹெட்டி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த சிந்தனைக் கொள்கைகளும் அதே பத்திரிகை நிறுவனத்தில் அச்சிடப்படட்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’