வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 அக்டோபர், 2010

கருத்துகளை அனுப்பக்கோருகிறது ஐ.நா. நிபுணர்குழு

லங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு எழுத்துமூலமான வாதங்கள், கருத்துகளை கோரியுள்ளதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.

இந்நிபுணர் குழுவிடம் வாதங்களையும் கருத்துகளையும் முன்வைக்க விரும்பும் எவரும் எழுத்துமூலம் 10 பக்கங்களுக்கு மேற்படாத வகையில்; அவற்றை நிபுணர் குழுவுக்கு அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் டிசெம்பர் 15 ஆம் திகதி க்கு முன் நிபுணர் குழுவுக்கு இவற்றை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் குறித்து ஆலோசனை கூறுவதற்காக இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் மூவரடங்கிய நிபுணர்குழுவை பான் கீ மூன் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’