இலங்கை, இந்தோனேஷியா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குb பணியாளர்களாக சென்றோரிடமிருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு 10ஆயிரம் முறைப்பாடுகள் வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக குவைத் நாட்டுக்கு பணியாளர்களாக செல்பவர்கள் அதிகளவு சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய, வட ஆபிரிக்க நாடுகளுக்கான கண்காணிப்பாளர் பிரியங்கா ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பணியாளர்களாக செல்பவர்களுக்கு ஓய்வற்ற வேலைகள் அதற்கான உரிய ஊதியம், மற்றும் உரிய ஆகாரங்கள் வழங்கப்படுவதில்லை எனவும் பாலியல் ரீதியான துன்புறுத்தல், மன ரீதியான அழுத்தங்களுக்கு அவர்கள் உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’