வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 அக்டோபர், 2010

லசந்த கொலை சந்தேக நபரின் விடுதலை குறித்து பொலிஸ் மா அதிபருடன் ஆலோசனை

ண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான சந்தேக நபர் குறித்து பொலிஸ் மா அதிபருடன் கலந்தாலோசனை நடத்தியபின் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றுக்கு இன்று அறிவித்துள்ளனர்.

லசந்த விக்கிரதுங்க மீது தாக்குதல் நடத்தப்பட்டபின் அவர் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவரிடமிருந்து செல்லிட தொலைபேசியை திருடியதாக சுகத் பெரேரா எனும் சந்தேக மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மீரிஹா பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர், மேற்படி செல்லிட தொலைபேசி முச்சக்கர வாகன சாரதியொருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அச்சாரதி அத்தொலைபேசியை 6000 ரூபாவுக்கு வாங்கியிருந்தார்.
அச்சந்தேக நபர் ஒரு வருடகாலமாக விளக்கமறியலில் உள்ளபோதிலும் அக்கொலையில் தனக்குள்ள தொடர்பு குறித்து அவர் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. இ;நிலையில் பொலிஸ் மா அதிபருடன் கலந்தாலோசனை நடத்தியபின் சந்தேக நபரின் விடுதலை குறித்து தீர்மானிக்கப்படும் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’