வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

போலி தங்க நாணயங்களை விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது

நூராதபுரப் பகுதியில் ஒரு மில்லியன் பெறுமதியான தங்கமுலாம் பூசப்பட்ட நாணயங்களை விற்பனை செய்ய முயன்ற இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
.இது தொடர்பில் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி, மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் கேகாலைப் பிரதேசத்திலுள்ள வியாபாரியொருவருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட நாணயங்களை விற்பனை செய்ய முயன்றதாகவும் கூறினார். புதையல் தோண்டியதன் மூலமே இது கிடைக்கப் பெற்றுள்ளதென சந்தேக நபர்கள் கூறியதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இச்சந்தேக நபர்கள் எங்குள்ளனரென்பது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேற்படி சந்தேக நபர்கள் முகஹெலுப்பல்லம மற்றும் தெஹியத்தகண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இவர்கள் கூறிய விடயம் குறித்து சந்தேகமடைந்த வியாபாரி, அநூராதரம் விசேட குற்றப்பிரிவிலுள்ள நண்பரொருவருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மேர்வின் கருணாரட்னவின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவினர் சென்றுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அநூராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அநூராதபுரம் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’