வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

கடற்றொழில் மகா சம்மேளனத்தின் மாநாடு இன்று புத்தளத்தில்

டற்றொழில் மகா சம்மேளனத்தின் புத்தளம் மாவட்ட மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு புத்தளம் ஐபீஎம் மண்டபத்தில் இடம்பெற்றது. புத்தளம் மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அநுர ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் கடற்றொழில் நீரியல்வளத் துறை அமைச்சர் டாக்டர் ராஜித் சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

புத்தளம் தேர்தல் தொகுதியின் புத்தளம், முந்தல், கல்பிட்டி, வண்ணாதவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளினைச் சேர்ந்த பல மீனவ சங்கங்களின் ஏராளமான கடற்றொழிலாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கே. ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்டர் எண்டனி பெரேரா, வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சர் சனத் நிஷாந்த, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என். டி. தாஹிர், சிந்தக மாயாதுன்ன உட்பட பலரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உரையாற்றுகையில் கூறியதாவது,
நாம் கடற்தொழில் அபிவிருத்திக்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். கடற்றொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல்வேறு முக்கிய வேலைத் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகின்றது.
கடற்றொழிலாளர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தக்கூடிய வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன. புதிய படகுகளையும், தொழில்நுட்ப வசதிகளையும் மீனவர்கள் பெற்றுக் கொள்ள வங்கிகள் மூலம் மிகக் குறைந்த வட்டிக்கு கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும். மீனவர்கள் நடுக்கடலில் சென்று திசை மாறி அலைக்கழிவது இனிமேல் நடக்கா வண்ணம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
நாட்கணக்கில் கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்களின் மீன்கள் பழுதாகா வண்ணம் பாதுகாக்கவும் நவீன முறையிலான வசதிகள் செய்யப்படும். அவை கரைக்கு வரும் போது அன்று பிடிக்கப்பட்ட மீன்களைப் போல இருக்கும்.
மீனவர்களினதும் நலன் பாதிக்கா வண்ணம் மீனின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு, இனிமேல் வெளிநாட்டிலிருந்து செமன்டின், கறுவாடு, மாசி போன்றவற்றை இறக்குமதி செய்யாது இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். இன்று கடலில் முழுப்பகுதியும் விடுவிக்கப்பட்டு மீனவர்களுக்கு சுதந்திரமாக தொழிலில் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’