வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 6 அக்டோபர், 2010

இன்றைய சூழலைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை மாணவ சமூகம் சரியாகவும் திறமையாகவும் பயன்படுத்தி சமூகத்திற்கு பணியாற்ற வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் மாணவர்கள் தமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியான வழிமுறையிலும் திறமையாகவும் பயன்படுத்திக் கொள்வதுடன், எமக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் பணிபுரிய வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.
கிடைக்கப் பெற்ற பல நல்ல சந்தர்ப்பங்களை முன்னைய தமிழ் அரசியல் வாதிகள் சரியாகவும் முறையாகவும் பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தினாலேயே எமது மக்கள் அநியாயமாக உயிரிழக்கவும் அவர்களது சொத்துக்கள் அழியவும் காரணமாக இருந்தது.
எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான இழப்புகளோ துன்ப துயரங்களோ ஏற்படாத வண்ணம் இன்றைய சூழலை பாதுகாக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவருடைய கடமையுமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்பதாக நிகழ்விற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் அவர்களும் கல்வித்துறைசார்ந்தோரும் மாணவர்களின் அணியிசை வகுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு தேசியக் கொடியினை அமைச்சரும் பாடசாலைக் கொடியினை பாடசாலை அதிபரும் ஏற்றி வைத்தனர். சிறப்புரையினைத் தொடர்ந்து பாடசாலை மட்டத்தில் கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் சாதித்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வை அமைச்சர் அவர்கள் சம்பிரதாயப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’