வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 அக்டோபர், 2010

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை மீள் நிர்மாணம்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையை அபிவிருத்திக்கு உட்படுத்தி மீளக் கட்டியெழுப்புவதான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த கைத்தொழில் பேட்டையின் கீழ் 36 சிறுகைத்தொழில் நிறுவனங்கள் செயற்பட்டு வந்த நிலையில் யுத்தம் காரணமாக அவை அழிவடைந்தன. இதனால் குறித்த சிறுகைத்தொழில் துறையின் மூலம் அன்றாடம் வருமானத்தை ஈட்டிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே இந்தக் கைத்தொழில் பேட்டையினை மீளக் கட்டியெழுப்புவதாக மேற்படி கைத்தொழில் பேட்டையினை மீளக்கட்டியெழுப்பும் யோசனையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியாதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதற்காக இந்திய அரசாங்கத்தினால் 174 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதுடன் கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியன இணைந்து 25 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்டத்தில் சிறிய மற்றும் மத்தியதர கைத்தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதற்காக சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் கடந்த 1971 ஆம் ஆண்டு மேற்படி கைத்தொழிற்பேட்டை நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அது யுத்த சூழ்நிலை காரணமாக அழிவிற்கு உள்ளாக்கப்பட்டதனால் யாழ் மாவட்ட கைத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதுடன் பெருமளவிலானோர் தொழில் வாய்ப்புகளையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’