வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் அதிகாரிகள் உத்தியோகத்தர்களுடன் அவசர கலந்துரையாடல்.

மீமீள் குடியேறிய மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் அதிகாரிகள் உத்தியோகத்தர்களுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றை கடந்த 29 ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான சந்திரகுமார் அவர்கள் நடத்தியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
. இந்தக் கலந்துரையாடலில் உள்ளுராட்சி சபைகளின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி மற்றும் கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் திரு. சந்திரகுமார் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து அவற்றுக்கான விளக்கத்தைக் கோரினார்.
போரினால் பாதிப்படைந்து மிகவும் நலிவுற்ற நிலையில் தங்கள் பிரதேசங்களுக்குத் திரும்பியுள்ள மக்களுக்கான சேவைகளை அர்ப்பணிப்பு மனப்பாங்குடன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மக்கள் நிர்வாகத்தின் மீதும் அதிகாரிகளின் மீதும் முறைப்பாடுகளைச் செய்யும் நிலை கவலைக்குரியது. இது ஏற்கக் கூடியதொன்றல்ல என்றும் தெரிவித்தார்.
இதேவேளை அர்ப்பணிப்புடன், பலத்த சிரமங்களுடன் வேலை செய்யும் ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் இந்தப் பிரதேச சபையில் இருப்பதையிட்டு பாராட்டுத் தெரிவித்தார்.
மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளும் திருப்தியற்ற நடைமுறைகளுமே இந்த அவசர கூட்டத்தைக் கூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இனிமேல் இந்த நிலை நீடிக்கப்படமாட்டாது என நம்புகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து பிரதேச சபைகளின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கிளிநொச்சியின் புதிய சந்தை தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகளும் நடவடிக்கைளும் நியாயமற்ற முறையில் உள்ளதாக மக்கள் கூறியதையடுத்து குறித்த பிரதேச சபையிடமிருந்து விரைவில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தனக்கு சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் பணிக்கப்பட்டது.
இவை தவிர மேலும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித்திட்டங்கள் அவசர உதவிகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’