வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 6 அக்டோபர், 2010

ஜனாதிபதியின் இரண்டாவது பதவி காலத்துக்கான பதவியேற்பு நவம்பரில்

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தடவை காலத்துக்கான பதவியேற்பு விழா வெகு விமர்சையாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அனுராதபுரம் பிரதேசத்தில் நவம்பர் மாதம் 18 அல்லது 19 ஆம் திகதி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன என்று ஆளும் கட்சி அமைச்சர்கள் தெரிவித்தனர்.
கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர்கள் இருவர் இந்த விடயங்களை குறிப்பிட்டனர்.
அமைச்சர் மைத்திரிபõல சிறிசேன குறிப்பிடுகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தடவை காலத்துக்கான பதவியேற்பு விழாக்கோலமாக அனுராதபுரம் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் நவம்பர் மாதம் இந்த பதவியேற்பு விழா நடைபெறும்.
கடந்த 2005 ஆம் ஆண்டு நாடு இக்கட்டான நிலையில் இருந்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்றார். இந்நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. மேலும் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் பாரிய வெற்றியை ஜனாதிபதிக்கு வழங்கினர். தற்போது அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பது தொடர்பில் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
எனவே இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக உருவாக்கும் வகையில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம். நாட்டின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாணங்களுக்கு விஜயம் செய்து அவற்றின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றார். அண்மையில் ஜனாதிபதி பொலன்னறுவையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். பராக்கிரமபாகு அரசருக்கு பின்னர் பொலன்னறுவையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த தலைவர் என்றால் அது எமது ஜனாதிபதியாகவே இருக்க முடியும் என்றார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தகவல் வெளியிடுகையில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தடவை காலத்துக்கான பதவியேற்பு விழா அநுராதபுரத்தில் நவம்பர் மாதம் 18 அல்லது 19 ஆம் திகதியில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஜனாதிபதியின் முதலாம் தவணை பதவிக்காலம் முடிவடையும் தினத்தன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு முதலாவது கப்பல் வரும் என்று எதிர்பார்க்கின்றோம். அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது ஒரு கனவாகவே இருந்து வந்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாக வந்தார். எனினும் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியே முழு நாட்டினதும் செயற்பாட்டு ரீதியான ஜனாதிபதியாக அவர் வந்தார் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’