கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (16) கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் இந்தப் பிரதேசத்தில் விவசாயத் துறையை அபிவிருத்தி செய்து அதன் மூலம் மக்கள் தன்னிறைவை அடைவதற்கும் அரிசித்தேவையை நாமே பூர்த்தி செய்வதற்கும் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வது முக்கியமானதாகும். விவசாயிகளுக்குத் தேவையான விதைநெல் உரம் கிருமிநாசினி என்பவற்றினை அறுவடை வரையான அனைத்துத் தேவைகளையும் தாமதமேற்படாமல் உரிய காலப்பகுதியில் வழங்க சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் முறையான திட்டங்களுடன் செயற்படவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை இம் மாவட்டத்தில் விவசாயச் செய்கையில் ஈடுபடும் அளவுக்கேற்ப விதை நெல் வழங்க முடியும் எனவும் மீள்குடியமர்ந்த பின்னர் நம்பிக்கையோடு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் இந்த மாவட்ட விவசாயிகளைப் பாராட்டுவதாகவும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்.
இதன்போது உழவு விதைநெல் வழங்கல் உரவிநியோகம் கிருமிநாசினி எரிபொருள் நீர்ப்பாசனம் அறுவடை நெற்கொள்வனவு என பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. எனவே உரத்தை அந்தந்தப் பிரதேசங்களில் களஞ்சியப்படுத்தப்படுவது அவசியம் என்பதுடன்
நெற்கொள்வனவில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு விவசாயிகளிடம் இருந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உரிய நேரத்தில் நெல்லைக் கொள்வனவு செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வடமாகாண உள்ளுராட்சி கூட்டுறவு அமைச்சின் செயலாளர் ஆர். விஜயலட்சுமி வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் பத்மநாதன் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதம் கரைச்சி கண்டாவளை. பூநகரி பளை ஆகிய பிரதேச செயலாளர்கள் மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் மாவட்ட விவசாயத் திணைககளம் மாவட்டக் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கூட்டுறவுச் சங்க முகாமையாளர்கள் விவசாயிகள் சம்மேளனத் தலைவர் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’