வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 அக்டோபர், 2010

பனை அபிவிருத்தி சபையால் புதிய மென்பானங்கள் அறிமுகம்!

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டலின் கீழ் பனை அபிவிருத்திச் சபையினால் புதிய மென்பானங்கள் விற்பனைச் சந்தைக்கு அறிமுகஞ் செய்து வைக்கப்படவுள்ளன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதன் பிரகாரம் பல்வகைப் பழங்களின் சாற்றுடன் பனஞ்சாறு கலந்த மென்பானமும் மாம்பழச் சாற்றுடன் பனஞ்சாறு கலந்த மென்பானமும் அறிமுகஞ் செய்து வைக்கப்படவுள்ளன.
இவ்வகை மென்பானங்களின் மாதிரிகள் இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முன்னிலையில் பரீட்சித்து பார்க்கப்பட்டன.
மேற்படி மென்பானங்கள் ஏனைய மென்பானங்களைப் போலல்லாது கூடிய காலம் உரிய தன்மையுடன் பாதுகாத்து வைக்கக் கூடிய தரத்தினைக் கொண்டிருக்கும். அத்துடன் நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் சீனித் தன்மையற்ற மென்பானங்களைத் தயாரிப்பது குறித்தும் அமைச்சர் அவர்களது முன்னிலையில் ஆராயப்பட்டதுடன் விரைவில் இவ்வகை மென்பானங்களைத் தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கதாகும்



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’