கடந்த கால யுத்தத்தாலும் ஏனைய காரணங்களாலும் உளநலம் பாதிக்கப்பட்டோரின் நலன்களை பேண நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (10) கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற உலக உளநல நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால யுத்தமும் ஏனைய காரணிகளும் பலரின் மனநிலையில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை மனநிலை பாதிப்பிலிருந்து வழமைக்கு கொண்டு வருவதற்கு உழைக்கின்ற மருத்துவர்கள் தாதியர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நான் இவ்விடத்தில் நன்றி கூறிக்கொள்கின்றேன். அத்தோடு உங்களுடைய கோரிக்கைகள் சாதகமாக பரிசீலிக்கப்பட்டு அவற்றினை தீர்பதற்கு நாம் தயாகரா உள்ளோம் எனக் கூறினார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 300 உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம்ட காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 200 பேர் அளவில் அடையாளம் காணப்படாமல் உள்ளதாகவும் மாவட்ட உளநல மருத்துவர் மா.ஜெயராசா அவர்கள் தெரிவித்தார். இன்றைய உளநலநாள் நிகழ்வினை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்தில் மரம் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இதனை விட பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உளநல ஆலோசனை தொண்டர்கள் இருபது பேருக்கான துவிச்சக்கர வண்டிகளை தான் வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’