குதிரைகளை வாங்குவதற்காக பல மில்லியன் ரூபாய்களை செலவிட பொலிஸ் திணைக்களம் தயாராகவுள்ளது. இதனடிப்படையில் 10 குதிரைகளை வாங்குவதற்காக நெதர்லாந்து உட்பட மேற்கத்தேய நாடுகளுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது
.இவ்வாறு வாங்கப்படும் குதிரைகள் ஜனாதிபதி உட்பட முக்கிய அதிதிகள் கலந்து கொள்ளும் விசேட நிகழ்வுகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஒரு குதிரைக்கு சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவாகும் எனவும் ஏற்கனவே இருந்த பொலிஸ் குதிரைகள் இறந்துள்ளதனால் குதிரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’