ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாளை வெள்ளிக்கிழமை மதிய உணவு விருந்தளிக்கவுள்ளார்
.பொதுநலவாய விளையாட்டு விழாவில் கௌரவ அதிதியாக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் நாளை அவருக்கு இந்தியப் பிரதமர் மதிய உணவு விருந்தளிக்கவுள்ளதாக பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், வெளிவிவகார செயலாளர் சி.ஆர். ஜயசிங்க ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இச்சந்திப்பின்போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுநலவாய விளையாட்டு விழாவின் நிறைவு வைபத்தில் ஜனாதிபதி மஹிந்தவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒன்றாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தியாவுக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இன்று சந்தித்துப் பேசினார்.
சிறுபான்மைச் சமூகங்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் வழங்குவது தொடர்பான அரசியல் தீர்வை தீர்வை துரிதப்படுத்துவதன் அவசியத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’