எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்க வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈ.பி.டி.பி.யின் ஐக்கிய இராட்சியக் கிளையின் மாதாந்தக் கூட்டம் இம் மாதம் 10ம் திகதி கட்சியின் காரியாலயத்தில் அமைப்பாளர் தோழர் நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
முன்னதாக அண்மையில் உயிரிழந்த ஈ.பி.டி.பி உறுப்பினரான தோழர் கண்ணன் (அடைக்கலமூர்த்தி குருபரன்) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து தற்போது மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடிமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மீள்குடியமர்த்தப்பட்டுவரும் மக்களின் மறுவாழ்வுக்காகவும் அந்தந்தப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் ஒன்றிணைந்து முழுமையான பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’