தாம் உறுதியளித்தபடி இணுவில் மத்திய கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் முகமாக பல்லூடகத் தெறிகருவி ஒன்றினை கொள்வனவு செய்வதற்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இணுவில் மத்திய கல்லூரி சமூகத்தினரின் அழைப்பின்பேரில் கடந்த சனிக்கிழமை கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பங்குகொண்டிருந்தார். அச்சமயம் கல்லூரி அதிபர் சதானந்தன் கல்லூரியில் நிலவும் பொதுவான குறைபாடுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்த அதேவேளை மாணவர்களின் கல்வித் தேவைக்கென பல்லூடகத் தெறிகருவி தேவையாகவுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
கல்லூரி அதிபர் கேட்டுக்கொண்ட கோரிக்கைகளில் மாணவர்களுக்கான பல்லூடகத் தெறிகருவியை பெற்றுத்தருவதாக அச்சமயம் அமைச்சரவர்கள் உறுதியளித்திருந்தார். தமது உறுதிமொழிக்கு அமைவாக இன்றையதினம் மகேஸ்வரி நிதியமூடாக அதற்குரிய பெறுமதியான 139500 ரூபாவிற்குரிய காசோலையினை கையளித்தார். இன்று மாலை அமைச்சரின் பணிமனைக்கு வருகை தந்திருந்த கல்லூரி அதிபர் சதானந்தன் மற்றும் கல்லூரியின் பழைய மாணவனும் கொழும்பு பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினருமான சந்திரலிங்கம் ஆகியோரிடம் மேற்படி காசோலையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’