வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 அக்டோபர், 2010

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உழையுங்கள் - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அனைவரும் சேர்ந்து உழையுங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (29) கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இல 1 பாடசாலையில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கடந்த யுத்த காலத்திலும் பெரும் அனுபவங்களுக்கு மத்தியிலும் நீங்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றிகரமாக சித்தியடைந்து உங்களது பாடசாலைக்கும் இப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதையிட்டு நான் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெரும் துன்பத்திற்கு மத்தியில் மீள்குடியேறி உங்களது கல்விச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளீர்கள் இந்த வகையில் கடந்த மூன்று வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 30 மாணவர்களுக்கும் தலா ஆயிரம் ரூபா வீதம் வங்கியில் வைப்புச் செய்து தருவதாகவும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்த இக்கட்டான சூழ்நிலையில் செயற்பட்டுவரும் உங்களை பாராட்டுவதோடு உங்களது குறைகளை தீர்த்து தருவதில் நாம் தயாராக இருக்கின்றேன் எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்களும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். இதில் ஸ்கந்தபுரம் முன்னாள் கிராம அலுவலகர் மகேந்திரம் தற்போதைய கிராம அலுவலர் கோட்டக் கல்வி அதிகாரி அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’