யுத்தம் காரணமாக உயிரிழந்த சகோதரியின் நினைவாக இப்பாடசாலைக்கு கல்விக் கடவுளாக வணங்கப்படும் சரஸ்வதி சிலையை அமைத்துக் கொடுத்து பாடசாலைக்கு சிறப்பை ஏற்படுத்தித் தந்துள்ள அமரர் செல்வி நடராசா நளினி குடும்பத்தினரை பாராட்டுவதில் பெருமிதமடைகின்றேன் என (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வடமராட்சி கிழக்கு, குடத்தனை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் நேற்று இடம்பெற்ற வாணி சிலை திறப்பு விழாவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதங்கேணி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று முதன் முதலாக இப்பாடசாலையில்தான் வாணி சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக குடத்தனை வடக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வி நடராசா நளினி உயிரிழந்தார். அவரது நினைவாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அமரர் நடராசா நளினியின் சகோதரர்கள் இவ்வாணிசிலையை இப்பாடசாலைக்கு அமைத்துக் கொடுத்துள்ளனர். அமரரின் நாமம் இம்மண்ணில் வாழ வேண்டும் அதுவும் கல்வி குடியிருக்கும் பாடசாலையில் வாழவேண்டும் அத்துடன் தாம் கற்ற பாடசாலையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் அமைத்துக் கொடுத்ததுடன் பாடசாலைக்கு சிறப்பையும் பெற்றுத் தந்துள்ளனர்.
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பல தேவைகள், குறைபாடுகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இவ்வருடம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியில் வடமராட்சியில் உள்ள பாடசாலைகளுக்கே அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்பின் பேரில் குறிப்பாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மருதங்கேணி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலைக்கு அமைச்சர் அவர்கள் நேரடியாக விஜயம் செய்தபோது மாணவர்கள் கணினி அறிவை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் கணனி அறை அமைப்பதற்கு மதிப்பீடு கோரியிருந்தார். அது கிடைக்கப் பெற்றதும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்வைபவத்தில் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பணிமனை நிர்வாக உத்தியோகத்தர் த.கணேசமூர்த்தி மருதங்கேணி கோட்டக் கல்வி அதிகாரி பொன்னையா அம்பன் வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் கனகரட்ணம் கிராமசேவகர் பாலசுந்தரம் பாசாலை அதிபர் கதிர்காமலிங்கம் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பாஸ்டர் ஜெயக்குமார் சோதிலிங்கம் நளினியின் சகோதரர்கள் சுவேந்திரன் நகுலதாஸ் (கனடா) உட்பட ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். நளினியின் சகோதரர்களுக்கு ஸ்ரீரங்கேஸ்வரன் நினைவுக் கேடயம் ஒன்றை வழங்கிக் கௌரவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’