வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 அக்டோபர், 2010

சர்வதேச பாடசாலைகளின் கவர்ச்சியை கண்டு ஏமாற்றம் அடையக் கூடாது: கெஹெலிய

பெற்றோர்களும் மாணவர்களும் பாடநெறிகள் மற்றும் சர்வதேசப் பாடசாலைகள் பற்றிய கவர்ச்சி விளம்பரங்களுக்கு ஏமாற்றமடையாது சரியான வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் கண்டி திருத்துவப் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற ‘அத்தியாபண’ என்ற கல்விக் கண்காட்சி மற்றும் தொழில் வழிகாட்டல் விளக்கச் செயலமர்வு என்பவற்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கெஹெலிய, இன்று நாட்டில் எங்கு பார்த்தாலும் மழைகாலத்து காலாண்கள் போன்று ஆங்காங்கே சர்வதேசப் பாடசாலைகளும் தனியார் கல்விக் கூடங்களும் முளைத்துவருகின்றன. இவற்றின் தரம் தகுதி பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்களது நோக்கம் முதலீட்டுவது. பெற்றோரின் நோக்கம் தம் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவது. அது எத்தகைய கல்வி என சீர்தூக்கிப் பார்ப்பதில்லை.
இதன் காரணமாக இன்றைய சமுதாயம் திசை மாறிச் சென்று கொண்டிருக்கிறது. இவ் விடயமாக எதிர் காலத்தில் கட்டாயம் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும். எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ் விடயமாக முறையான திட்டமொன்றை உயர் கல்வி வாய்ப்பை எதிர் பார்த்துள்ள மாணவர்களுக்கு ‘அத்தியாபண’ கண்காட்சி ஒரு நல்ல வரப்பிரசாதமாகும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
எனவே பெற்றோர்களும் மாணவர்களும் கண்ட கண்ட பாடநெறிகள் பற்றிய விளம்பரம் மற்றும் சர்வதேசப் பாடசாலைகளின் கவர்ச்சி விளம்பரங்கள் முதலியவற்றிற்கு ஏமாற்றமடையாது சரியான பாதையைக் கடைப் பிடிக்க வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களுக்கு அத்தியாபண போன்ற கண்காட்சிகள் நல்லவழிகாட்டியாக அமைவதாகக் கூறினார்.
இக்கண்காட்சி 22, 23., 24. ஆகிய திகதிகளில் இடம் பெறுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’