வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 அக்டோபர், 2010

சிறுவர்களின் வளமான எதிர்கால வாழ்வுக்கு அனைவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் - ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட அமைப்பாளர்

சிறுவர்களின் உடல் உள விருத்தியலும் அவர்களது வளமான எதிர்கால அமைதியான மகிழ்ச்சியான வாழ்விலும் அனைவரும் அக்கறை காட்டி செயற்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (03) சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விடியல் தென்றல் மொட்டுக்கள் ஆகிய சிறுவர் கழங்கள் இணைந்து யாழ். அளவெட்டி அருணாசல வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த கால யுத்த காலத்தில் சிறுவர்கள் தவறான வழியில் வழிநடத்தப்பட்டதாகவும் தற்போது சுமுகமான நிலையில் சிறுவர்களை சரியான வழிநோக்கி அவர்களை வழிநடாத்தி அவர்களை சமூகத்தில் நல்லதொரு பிரஜையாக வருவதற்கு அனைவரும் முன்னின்று செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கமைத்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை இதுபோன்ற சிறுவர் நிகழ்ச்சிகளை எதிர்காலத்திலும் முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி. சுன்னாகம் - மல்லாகம் பிரதேச பொறுப்பாளர் அன்பு வைகுறோ நிறுவன களநிலை இணைப்பாளர் உதயகுமார் உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’