வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

பள்ளிவாசலூடாக ஆயுதம் ஒப்படைப்பு

ட்டவிரோத ஆயுதங்களைக் கையளிக்குமாறு கல்முனைப் பொலிஸார் விடுத்த அறிவித்தலுக்கிணங்க, கல்முனைக்குடி பள்ளிவாசலொன்றினூடாக ரி.56 ரக துப்பாக்கியொன்றும், அதற்கான ரவைக்கூடும் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தெரிவித்தார்
.பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் அறிவுறுத்தலுக்கிணங்க, அம்பாறை மாவட்ட வடக்கு உதவிப் பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் வீரசூரியவின் வழகாட்டுதலின் கீழ், சட்டவிரோத ஆயுதங்களை பொதுமக்களிடமிருந்து களையும் மேற்படி வேலைத் திட்டத்தினை தாம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.
கல்முனைப் பொலிஸ் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றினை செப்டெம்பர் 30ஆம் திகதிக்குள் தத்தமது பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்கனவே அறிவித்தலொன்றை விடுத்திருந்தார்.
இந்நிலையில், மேற்படி ஆயுதம் கல்முனைக்குடிப் பள்ளிவாசலொன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் தாம் அதைக் கையேற்றதாகவும் கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா மேலும் கூறினார்.
இதேவேளை, ஆயுதத்தை பள்ளிவாசலில் ஒப்படைத்த நபர் தன்னை இனங்காட்டிக் கொள்ளவில்லை எனத் தெரிவித்த அவர், ஆயுதம் ஒப்படைக்கப்பட்ட பள்ளிவாசல் குறித்து தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’