வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 அக்டோபர், 2010

தாய்லாந்தில் இலங்கை அகதிகள் கைது!

தாய்லாந்து இராணுவத்தினரும் கனேடியன் இன்டர்போல் பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 60 ஆண்கள் 50 பெண்கள் 7 கர்ப்பிணித் தாய்மார்கள் 13 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும் கப்பலில் கனடாவிற்கு செல்வதற்காக வந்திருந்த அகதிகளும் கைது செய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக்கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையினை கனேடியன் இன்டர்போலும் தாய்லாந்து இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்திலிருந்து கப்பலில் கனடாவுக்கு இலங்கையர்களை அனுப்பிவரும் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவர்களை அனுப்பி வைக்கும் பிரதான முகவர்கள் உதவி முகவர்கள் சந்தேக நபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் நேற்றுக் காலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட வேளை தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிவிட்டு 15 இலங்கையர்கள் தப்பியோடி விட்டதாகவும் இதனைத் தொடர்ந்து தாய்லாந்து இராணுவமும் கனேடியன் இன்டர்போலும் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’