தம்மை ஐ.தே.க. விலிருந்து நீக்குவதற்கு எதிராக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தாக்கல் செய்த வழக்கில் ஐ.தே.க. தலைவர் ரணில், பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் நவம்பர் 25ஆம் திகதி ஆட்சேப மனு தாக்கல் செய்வதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அரசியலமைப்பின் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால் தம்மை ஐ.தே.க. விலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், அதனை நிறுத்தும்படி நீதிமன்றத்தின் ஆணை கோரும் மனுவை மனுஷா நாணயக்கார, உபெக்ஷா ஆகியோர் தாக்கல் செய்தனர்.
இதன் அடிப்படையில் இவர்களை ஐ.தே.க. விலிருந்து நீக்குவதற்கு இடைக்கால தடையுத்தரவு நீதிமன்றால் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
நேற்று இந்த மனு நீதிமன்றத்தின் கவனத்தில் எடுக்கப்பட்டபோது, ரணில் விக்கிரமசிங்கவும், திஸ்ஸ அத்தநாயக்கவும் தமது சார்பில் பேச வழக்குரைஞர்களை நியமித்ததுடன், எதிர்வாதம் செய்ய வேறு திகதியொன்று தரும்படி நீதிமன்றத்தை வேண்டியபோது அவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது.
நவம்பர் 25ஆம் திகதி இவர்கள் தமது வாதத்தை தொடர நீதிபதி அனுமதித்து வழக்கை ஒத்திவைத்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’