களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபோரைதீவு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற திடீர் தேடுதல் நடவடிக்கையில் 14.5 அடி உயரமாக 5 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றன.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடுவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 14.5 அடி உயரமான கஞ்சா செடிகளிலிருந்து 1.5 கிலோகிராம் கஞ்சா பெறப்பட்டதாகவும் அவை அனைத்தும் எரித்து அழிக்கப்பட்டதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிழ்மிரருக்கு தெரிவித்தார். அத்தோடு தன் வாழ்நாளில், கஞ்சா செடியொன்று இவ்வளவு பெரிய மரம்போல் வளர்ந்திருந்ததை முதன்முதலாக பார்த்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கஞ்சா செடிகளை வளர்த்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’