யாழ்ப்பாணம் கொக்குவில் சம்பியன் வீதியில் அநாதரவாகக் கைவிடப்பட்ட நிலையில், பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது
.இன்று காலை 6 மணியளவில் உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் இப்பகுதியில் இச்சிசு காணப்பட்டுள்ளது.
இவ்வீதியால் சென்றவர்கள் குழந்தையின் அழுகைக் குரல் கேட்டு பார்த்தபோது சிசு கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் ,அப்பகுதிக் கிராம சேவகருக்கு அறிவித்ததை அடுத்து கிராம சேவகர், பொலிஸார் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சிசுவை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’