முன்னதாக பண்டத்தரிப்பு பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பனம்பொருள் உற்பத்தி நிலையத்தை பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
பெயர்ப் பலகைக்கான திரைச் சீலையினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்ததுடன் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி உள்ளிட்டோர் பனம்பொருள் உற்பத்திகளை பார்வையிட்டனர்.
இதனை அடுத்து நீர்வேலியில் அமையப் பெற்றுள்ள வலி கிழக்கு தென்பகுதி ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் கட்டிடத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற புதிய அரிசி ஆலையும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆலையை ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்க்ள திறந்து வைத்த அதேவேளை பெயர்ப் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அரைக்கும் ஆலை இயந்திரத்தை அமைச்சர் ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் அரிசயைப் போட்டு அதன் பணிகளை தொடக்கி வைத்தனர்.
இதேபோன்று சிறுப்பிட்டியில் அமையப் பெற்றுள்ள வலி கிழக்கு ப.நோ.கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் புதிதாக அமையப் பெற்றுள்ள அரிசி ஆலையையும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாவை வெட்டி அரிசி ஆலையை திறந்து வைத்ததுடன் பெயர்ப்பலகையினை ஆளுநர் திரைநீக்கம் செய்து வைத்தார் பண்டத்தரிப்பு பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தில்










நீர்வேலி அரைக்கும் ஆலையில்









சிறுப்பிட்டி அரைக்கும் ஆலையில்









0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’