கடந்த மாதம் 23 ந் திகதி மட்டக்களப்பில் வைத்து கடத்தி செல்லப்பட்ட மட்டு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றுசென்றார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரான சகாயமணி கடத்தப்பட்டு இன்றுடன் 13 நாட்களாகின்றன. இதுவரை எதுவித முடிவுகளும் கிடைக்கவில்லை என அவரது வீட்டார் தெரிவித்துள்ளார்கள். இங்கு சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சகாயமணியின் குடுமபத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன் வெகு விரைவில் இது தொடர்பில் தாம் முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்தாகவும் குறிப்பிட்டடார்.
கடத்தப்பட்டது தொடர்பில் சகாயமணியின் மனைவியிடம் வினவிய போது அவர் குறிப்பிட்டது.
தனது கணவனை கடத்தியவர்கள் யார் எனத் தனக்கு நன்றாகத் தெரியும். அத்தோடு எனது கணவன் ஓர் மக்கள் பிரதிநிதி மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? மேலும் மட்டக்களப்பு மாநகர சபையானது, என் கணவர் கடத்தப்பட்டது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக மாநகர மேயர் திருமதி S. பிரபாகரன் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. நான் இன்னும் ஓரிரு நாட்களில் எனது கணவன் வீடு திரும்பவில்லை என்றால் மாநகர சபை மேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து எனது பிள்ளைகளுடன் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என மிகவும் மன வேதனையுடன் தெரிவித்தார்.
சுகாயமணி கடத்தப்பட்டதனைக் கண்டித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை மட்டக்களப்பு நகர் முழுவதும் விநியோகித்து வருகின்றார்கள்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’