நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிப் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க அரசுடன் இணைந்து கொள்வார் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஐதேக மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினரை இழக்கப் போவதாகவும் கூறப்படுகிறது 
.நியூயோர்க் சென்றிருக்கும் ஜோன் அமரதுங்க நாடு திரும்பியதும் அரசுடன் இணைந்து கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜோன் அமரதுங்க. இலங்கை வெளி விவகார அமைச்சின் விசேட அழைப்பின் பேரில் தாம் நியூயோர்க் செல்ல இருப்பதாக முன்னர் தெரிவித்தார். இதற்கு ஐ.தே.கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அதன் பின்னர், தாம் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நியூயோர்க் செல்வதாக அவர் தெரிவித்தார்.
அவர் இன்று 27ஆம் திகதி நாடு திரும்பியதும் அரசுடன் இணைந்துகொள்வார் எனவும், அமைச்சரவை மறுசீரமைப்பில் விமானப் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோன் அமரதுங்கவின் வீட்டுக்குத் தற்போது விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                      -
                    

  











.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’