வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 27 செப்டம்பர், 2010

ஆர்ப்பாட்டம் மூலம் ஆஸி. அரசு மீது ஆதிக்கம் செலுத்த முடியாது:குடிவரவு அமைச்சர்

வுஸ்திரேலியா வில்லாவூட் தடுப்பு நிலைய கூரையின் மீதேறி 9 இலங்கைத் தமிழ் அகதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பிரவுன், இவ்வாறனா ஆர்ப்பாட்டம் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது எனக் கூறினார்
.ஒவ்வொரு குடிவரவுத் திணைக்களமும் புகலிடக் கோரிக்கையாளர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை ஆராயுமே என்பதுடன், ஆனால் இவ்வாறான ஆர்ப்பாட்டம் மூலம் அதிகாரம் செலுத்த முடியாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கூறியதாக டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவித்தன.
சிலவேளையில் இந்த வாரம் தனிநபர்களின் குடிவரவு அந்தஸ்து மதிப்பீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியா வில்லாவூட் தடுப்பு நிலையக் கூரையின் மீதேறி 9 இலங்கைத் தமிழர்கள் உட்பட 11 பேர் நீராகாரமின்றி 24 மணித்தியாலங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் கடந்த 21ஆம் திகதி முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’