வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 29 செப்டம்பர், 2010

காங்கிரஸில் சேருகிறார் அஜீத்?!

அஜீத்தைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டேயிருக்கும் போலுள்ளது.
சமீப நாட்களாக அவர் பற்றி உலா வரும் சர்ச்சை... "அஜீத் காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார்" என்பதே
.சில நாட்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் சைதை துரைசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜித், அங்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் ‌பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது.
ஆனால் அஜித் தரப்பு அதனை மறுத்தது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவரிடம் அஜித் ஆசீர்வாதம் பெற்றார் என்று அஜித் வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அஜித் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய செய்தியொன்று கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது. சில புலனாய்வுப் பத்திரிகைகளும் இதுகுறித்து விலாவாரியாக கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
கட்சியில் சேர்ந்து ராகுல் காந்தி கரத்தை வலுப்படுத்துமாறு சமீப காலமாக அஜீத்துக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கிறதாம். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேவி தங்கபாலு உள்ளிட்ட சிலரக் அஜீத்திடம் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் அஜித் அரசியல் கட்சியில் சேரும் முடிவை இப்போதைக்கு எடுக்கவில்லை. பின்னாளில் தேர்தல் நேரத்தில் எந்தக் கட்சி என்று அவர் முடிவெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரம் இவற்றையெல்லாம் அஜீத் மறுக்கவோ ஒப்புக் கொள்ளவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் முத‌ல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜித், இதுபோன்ற விழாக்களுக்கு வருமாறு சிலர் மிரட்டுவதாக பகிரங்க குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள், பிரச்னைகளால் மிகவும் மன வேதனையடைந்த அஜித், முதல்வர் கருணாநிதியிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். அதன் பின்னரே சர்ச்சை ஓய்ந்தது.
அதே நேரம், ராகுலைச் சந்தித்தேன் என்றும், காங்கிரஸில் இணைவதைப் பற்றி யோசிப்பதாகவும் நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன் பேசியது நினைவிருக்கலாம்.
ஆனால் அவரைச் சேர்ப்பது குறித்து எந்த முடிவையும் காங்கிரஸ் அறிவிக்கவில்லை. அதேநேரம் சென்னை மாநகராட்சி மூலம் சில சிக்கல்களுக்கு அவர் உள்ளானார். விஜய்யும் அத்துடன் அமைதியாகிவிட்டார். இப்போது அஜீத்தைச் சுற்றி காங்கிரஸ் பரபரப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கெனவே அஜீத் மீது கோபமாக உள்ள திமுகவினரை, காங்கிரஸ் மீதான அவரது புதிய பாசம் இன்னும் கடுப்பேற்றியுள்ளது!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’