18ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சபைக்கு உறுப்பினர்களை நியமிக்குமாறு பிரதமர் தி.மு.ஜயரட்ன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
குறித்த சபைக்கான உறுப்பினர்களை ஒரு வார காலத்திற்குள் முன்மொழியுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
குறித்த சபையானது 17ஆவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு பதிலாக இயங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’