அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டம் குறித்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று கண்டியில் விளக்கமளித்துள்ளார்
.அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக, குறிப்பாக ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து, எதிர்க்கட்சிகள் தவறான விளக்கங்களை அளித்து வருவதாகவும் மகாநாயக்க தேரர்களிடம் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று மகாநாக்க தேரர்களை சந்தித்து, உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து விபரித்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’