தான் இன்று அந்த ஆணைக்குழுவுக்கு வழங்கிய சாட்சியம் குறித்து தமிழோசையிடம் பேசிய அவர், 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்கள தலைமைகளின் போக்கும், அதன் பின்னர் தமிழ் தரப்பினரின் மத்தியிலான இணக்கமின்மையுமே இனப்பிரச்சினை இழுபறிநிலையை எட்டியமைக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
பல மணி நேரம் ஆணைக்குழுவின் முன்னதாக சாட்சியமளித்த அவர், இலங்கையர் என்பதற்காக தமிழர் என்பதையோ அல்லது தமிழர் என்பதற்காக இலங்கையர் என்பதையோ விட்டுக்கொடுக்க தாம் தயாராக இல்லை என்றும் ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா |
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கை அரசாங்கம் மோதல்கள் அற்ற பகுதிகளுக்கு வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும், விடுதலைப்புலிகள் அதற்கு அனுமதிக்கவில்லலை என்றும், அவர்களுக்கு ஆதரவான சக்திகளும், சர்வதேச சமூகமும் விடுதலைப்புலிகளுக்கு அந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்கத் தவறி விட்டன என்றும் குறிப்பிட்டார்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’