வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கன்னித்தன்மையை ஏலமிட்ட யுவதி மீது தாக்குதல்; தலைமயிர் கத்தரிப்பு

லத்திலிருந்த தனது தாயின் வீட்டை மீட்பதற்காக, தனது கன்னித்தன்மையை விற்பதாக அறிவித்திருந்த ஹங்கேரிய யுவதி, இனந்தெரியாத நான்கு மனிதர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளாள்.

தாக்குதல் நடத்தியவர்கள் அந்த யுவதியின் தலைமயிரையும் கத்தரித்து அலங்கோலமாக்கியுள்ளனர். ஆனால், அவளின் கன்னித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது.
18 வயதான இந்த யுவதி, தன்னை 'மிஸ் ஸ்பிரிங்' என மாத்திரம் அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளாள். ஹங்கேரிய 'தபு' தொலைக்காட்சி மூலம், தனது கன்னித்தன்மையை ஏலவிற்பனை செய்யப்போவதாக அறிவித்திருந்தாள். இந்த ஏலத் தொகை சிலதினங்களுக்குமுன் சுமார் 45 இலட்சம் ரூபாவை அண்மித்தது.  ஆனால் ஏலவிற்பனை முடிவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன், ஹங்கேரியின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நான்கு  ஆண்களால் அந்த யுவதி தாக்கப்பட்டுள்ளாள்.
இது தொடர்பாக அவள் கூறுகையில், 'அவர்கள் என்னை திறந்த வெளிக்கு இழுத்துச் சென்றனர். என்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப் போவதாக அச்சுறுத்தினர். எனது தலை மயிரை கத்தரித்தனர். தமக்குத் தேவையானதை   இலவசமாகவே எடுத்தக்கொள்வோம் என மிரட்டினர். பின், என்னை நோக்கி சிலர் வர, அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். நான் பயந்துவிட்டேன். அதனால் எனது திட்டத்தை கைவிட்டேன். இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அவள் தெரித்துள்ளாள்.
அவளுக்கு தற்போதுதான் வயது 18. அவள் தன்னுடைய உண்மையான பெயரைக் குறிப்பிட மறுத்துள்ளாள். மேற்படி ஏலவிற்பனை கையாளப்பட்ட முறை குறித்து அவள் அதிருப்தி தெரிவித்துள்ளாள்.
'எனது குடும்பத்தை பாதுகாக்கலாம் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அந்தப் பணத்தால் எனது தாயின் வீட்டை மீட்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது நான் அனுபவிக்கும் உணர்வுகளை விலையாகக் கொடுத்து அதை செய்ய நினைக்கவில்லை. ஊடக உலகம், இந்த விடயத்தை பகிரங்கமாக்கிய விதம் நான் நினைத்ததைப்போல் இலகுவாக இருக்கவில்லை' என மிஸ் ஸ்பிரிங் கூறியுள்ளாள்.
   .
alt

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’