வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

வெனிஸ் திரைப்பட விழாவில் மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குநர் விருது

வெனிஸ் நகரில் நடந்த திரைப்பட விழாவில் ராவண் படத்தை இயக்கிய இயக்குநர் மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.
தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியான படம் ராவண். தமிழில் ராவணன் என்றும் தெலுங்கில் தமிழ் டப்பிங்கும், இந்தியில் ராவண் என்ற பெயரிலும் இப்படம் வெளியானது.
தமிழில் விக்ரம், பிருத்விராஜ், ஐஸ்வர்யா ராய், கார்த்திக் , ப்ரியா மணி, பிரபு உள்ளிட்டோரும், இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகனாகவும் நடித்திருந்தனர்.
இப்படம் வெனிஸ் பட விழாவில் கலந்து கொண்டது. அப்போது சிறந்த இயக்குநருக்கான விருது மணிரத்தினத்திற்கு கிடைத்தது.
விருது வழங்கும் விழாவின்போது நடிகர் விக்ரம், மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர்.
விருது குறித்து மணிரத்தினம் கூறுகையில், இந்திய சினிமாவுக்கான அங்கீகாரமாக இதை கருதுகிறேன். இந்திய சினிமாவின் எல்லைகள் மேலும் விரிவடைந்து வளர்ந்துள்ளன என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’