யாழ் குடாநாட்டில் பரவலாக மரநடுகைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இதனடிப்படையில் யாழ் குடாநாட்டில் ஒவ்வொரு பகுதிகளிலும் நடுவதற்கென மரக்கன்றுகள் இனங்காணப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகளில் நடுவதற்காக பாக்கு பலா தென்னை மாதுளை மா என்பனவும் பாடசாலைகளில் நடுவதற்கு நாவல் மரமுந்திரிகை தேக்கு மலைவேம்பு பெரிய நெல்லி என்பனவும் ஆலயங்களில் இம்மரக்கன்றுகளுடன் சேர்த்து வில்வம் மரக்கன்றுகளும் பாதையோரங்களில் மலைவேம்பு விளா புளி ஆகிய மரக்கன்றுகளும் இனங்காணப்பட்டுள்ளன.
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகளில் தென்னை பலா மா எலுமிச்சை மரமுந்திரிகை தேக்கு மலைவேம்பு ஆலயங்களில் நாவல் மரமுந்திரிகை தேக்கு மலைவேம்பு பெரிய நெல்லி வில்வம் பாதையோரங்களில் சுந்தர வேம்பு மலைவேம்பு விளா என்பனவும் தென்மராட்சிப் பகுதியில் வீடுகளிலும் பாடசாலை மற்றும் ஆலயங்களிலும் மேற்கூறிய மரக்கன்றுகளும் பாதையோரங்களில் புளி மலைவேம்பு விளா என்பனவும் நடுகைக்காக இனங்காணப்பட்டுள்ளன.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் வீடுகளில் தென்னை மா மாதுளை எலுமிச்சை மரமுந்திரிகை பாடசாலைகளில் பெரிய நெல்லி மலைவேம்பு ஆலயங்களில் நாவல் மரமுந்திரிகை திருக்கொன்றை பெரிய நெல்லி வில்வம் பாதையோரங்களில் கசூரினா மலைவேம்பு விளா என்பனவும் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் வீடுகளில் தென்னை மா பலா எலுமிச்சை மரமுந்திரிகை முருங்கை ஆலயங்களில் நாவல் மரமுந்திரிகை தேக்கு மலைவேம்பு பெரிய நெல்லி வில்வம் பாதையோரங்களில் புளி மலைவேம்பு விளா என்பனவும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் வீடுகளில் தென்னை மா பலா எலுமிச்சை மரமுந்திரிகை பாடசாலைகளில் தேக்கு மலைவேம்பு ஆலயங்களில் நாவல் மரமுந்திரிகை தேக்கு மலைவேம்பு பெரிய நெல்லி வில்வம் பாதையோரங்களில் புளி மலைவேம்பு வாகை விளா என்பனவும் நடுகைக்கென இனங்காணப்பட்டுள்ளன.
இதேநேரம் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் வீடுகளில் தென்னை மா பலா எலுமிச்சை மரமுந்திரிகை பாடசாலைகளில் பெரிய நெல்லி மலைவேம்பு ஆலயங்களில் நாவல் மரமுந்திரிகை திருக்கொன்றை மலைவேம்பு பெரிய நெல்லி வில்வம் பாதையோரங்களில் கசூரினா மலைவேம்பு விளா என்பனவும் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் வீடுகளிலும் ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் மேலே குறிப்பிட்டவையும் பாதையோரங்களில் கசூரினா சுந்தரவேம்பு விளா என்பனவும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் வீடுகளில் தென்னை மா பலா எலுமிச்சை மரமுந்திரிகை முருங்கை பாடசாலைகளில் பெரிய நெல்லி தேக்கு மலைவேம்பு ஆலயங்களில் நாவல் மரமுந்திரிகை திருக்கொன்றை மலைவேம்பு பெரிய நெல்லி வில்வம பாதையோரங்களில் கசூரினா சுந்தரவேம்பு விளா நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் வீடுகளில் தென்னை மா தேக்கு எலுமிச்சை பாதையோரங்களில் புளி மலைவேம்பு வாகை உடுவில் பிரதேச செயலர் பிரிவில் வீடுகளில் தென்னை மா பலா எலுமிச்சை மரமுந்திரிகை முருங்கை பாடசாலைகளில் தேக்கு மலைவேம்பு ஆலயங்களில் நாவல் மரமுந்திரிகை தேக்கு மலைவேம்பு பெரிய நெல்லி வில்வம் பாதையோரங்களில் புளி மலைவேம்பு விளா என்பனவும் நடுகைக்கெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வீடுகளில் தென்னை மா பலா பப்பாசி எலுமிச்சை மாதுளை அம்பரெல்லா முருங்கை பாடசாலைகளில் தேக்கு மலைவேம்பு ஆலயங்களில் மருது மகிழம் மலைவேம்பு பெரிய நெல்லி வில்வம் பாதையோரங்களில் புளி மலைவேம்பு வாகை என்பனவும் நடுகைக்காக இனங்காணப்பட்டுள்ளன.
வேலணை பிரதேச செயலர் பிரிவில் வீடுகளில் தென்னை மா தேக்கு எலுமிச்சை மரமுந்திரிகை 10 ஏக்கர் சதுப்பு நிலத்தில் கசூரினா மரமுந்திரி நிழல் வாகை கருவாகை மருது கருவேலம் பாதையோரங்களில் புளி மலைவேம்பு வாகை ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் வீடுகளில் தென்னை மா தேக்கு எலுமிச்சை மரமுந்திரிகை பாதையோரங்களில் புளி மலைவேம்பு வாகை என்பனவும் நடுகைக்காக இனங்காணப்பட்டுள்ளன.
இதே நேரம் யாழ் குடாநாட்டின் கரையோரப் பகுதிகள் கசூரினா பூவரசு மருது கருவேலம் போன்ற மரக்கன்றுகள் நடுகைக்காக இனங்காணப்பட்டுள்ளன.
எனவே மரக்கன்றுகள் தேவையானவர்கள் அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்துடன் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகங்களுடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேற்படி பாரிய மரநடுகைத் திட்டத்திற்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 10 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது யாழ் குடாநாட்டில் பயன்தரு மரங்கள் பாரியளவில் அழிந்துள்ள நிலையில் இம்மரக்கன்றுகளைப் பெற்று அவற்றை உரிய முறையில் பராமரித்து அதிகப் பயன்களைப் பெற யாழ் குடாநாட்டு மக்கள் முன்வர வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’