வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

யாழ்கோ பால் நகரத்திற்கு அமைச்சர் திடீர் விஜயம்!

சுயலாபத்தை விடுத்து பொது இலாபத்தைக் கருத்தில் கொண்டே அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்
.திருநெல்வேலியில் அமையப் பெற்றுள்ள யாழ்கோ பால்நகரத்திற்கு இன்று (16) விஜயம் செய்த அமைச்சர் அவர்கள் நிறுவனப் பணிப்பாளர் சபை மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த பாற்சபை சரியாக செயற்படவில்லை என்றும் துஸ்பிரயோகம் நடைபெறுவதாகவும் மக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே அமைச்சர் அவர்களது இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இங்கு புதியதொரு தலைவர் நியமிக்கப்பட்டு சபையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதுடன் இதன் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எல்லோரும் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் நல்க வேண்டும். ஊழியர்களின் தேவைகள் கவனத்திலெடுக்கப்படும் அதேவேளை எல்லோரும் சுயலாபத்தை விடுத்து சபையின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் கவனத்தில் கொண்டு சேவை மனப்பான்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணிபுரியும் போதே பணிகளை முழுமையாக ஆற்ற முடியும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இச் சந்திப்பின் நிறைவில் யாழ்கோ பால் நகரத்தின் வளாகத்தையும் பால் சேகரிப்பு மற்றும் பதனிடும் தொழிற்சாலைக் கூடத்தையும் தொழில் துறைசார்ந்த தொழிற் கருவிகளையும் பார்வையிட்டதுடன் அவை தொடர்பான விளக்கங்களையும் துறைசார்ந்தோரிடம் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

இன்றைய சந்திப்பின் போது மேற்படி சங்கத்தின் தலைவர் ரஞ்சன் யாழ்.கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அருந்தவநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’