வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 18 செப்டம்பர், 2010

யாழ் மாவட்டத்தில் புதிய மின்விநியோகத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது!

லங்கைக்கு மின்சாரத்தை அறிமுகப்படுத்திய டி.ஜே.விமலசுரேந்திரவின் 136வது நினைவுதினத்தை முன்னிட்டு இலங்கைக்கு ஒளியேற்றுவோம் என்ற திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் வௌவேறு இடங்களில் புதிய மின்விநியோகத் திட்டங்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தொடக்கி வைத்தார்
.இதன் பிரகாரம் கோப்பாய் கயிட்டப்புல வீதி வரிக்கம்புரை கிராமத்திற்கான மின் விநியோகத்திட்டத்தை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பெயர்ப்பலகையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திரைநீக்கம் செய்ததுடன் வலி கிழக்கு பிரதேச செயலர் மோகன்தாஸ் இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய முகாமையாளர் முத்திரட்ணானந்தம் ஆகியோர் மின் அழுத்திகளை அழுத்து மின்விநியோகத் திட்டத்தை சம்பிரதாயப் பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.
இத்திட்டத்தின் மூலம் 66 குடும்பங்கள் பயன்பெறவுள்ளதாகவும் இதற்காக 5.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் 2011ம் ஆண்டு நிறைவடையும் போது குடாநாடு முழுமையிலும் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இதேபோன்று மறவன்புல வடக்குப் பகுதியிலும் மற்றுமொரு மின்விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்; பெயர்ப் பலகையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்ததைத் தொடர்ந்து யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய பொதுமுகாமையாளர் முத்துரட்ணானந்தம் ஆகியோர் மின் அழுத்திகளை அழுத்தி மின் விநியோகத் திட்டத்தை தொடக்கி வைத்தனர்.
அத்துடன் அமைச்சர் அவர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய குடியிருப்புக்கான வீடொன்றின் மின்அழுத்தியை அழுத்தி சம்பிரதாயப்பூர்வமாக திட்டத்தை தொடக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் 52 குடும்பங்கள் நன்ய்ள அதேவேளை இப்புதிய செயற்திட்டத்திற்காக 11.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் முத்துரட்ணானந்தம் தெரிவித்தார்.
இதேபோன்று புங்குடுதீவிலும் புதிய மின்விநியோகத் திட்டம் இன்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மின் விநியோகம் வடக்கின் வசந்தம் திட்டத்திற்கூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் நீர்மின்சாரத்தை ஆரம்பித்து வைத்த விமலசுரேந்திராவின் 136வது பிறந்த நாளையொட்டி இன்று நாடளாவிய ரீதியில் 99 மின்விநியோகத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் வட மாகாணத்தில் 18 மின் விநியோகத் திட்டங்களும் இதில் யாழ் குடாநாட்டில் 3 மின்விநியோகத் திட்டங்களும் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கோப்பாய் கயிட்டப்புல வீதி வரிக்கம்புரை கிராமத்திற்கான மின் விநியோகத்திட்டத்தை ஆரம்பித்த போது















மறவன்புல வடக்குப் பகுதி மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பித்த போது




















புங்குடுதீவு புதிய மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பித்த போது






















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’