வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 29 செப்டம்பர், 2010

யாழ். திருநெல்வேலி விவசாயப் பண்ணைக்கு விஜயம்

யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் விவசாய மற்றும் விலங்கு வேளாண்மை பண்ணைக்கு இன்றைய தினம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்களும் யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க அவர்களும் விஜயம் செய்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன]
இவ்விஜயத்தின் போது அங்கு திரண்டிருந்த விவசாய மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் யாழ் குடாநாட்டின் விவசாயத் துறை சார்ந்த பிரச்சினைகளைத் தான் படிப்படியாகத் தீர்த்துவரும் நிலையில் ஏதேனும் தேவைகள் குறைபாடுகள் இருப்பின் தனது கவனத்திற்குக் கொண்டுவரும்படிக் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து அமைச்சர் அவர்கள் ஆளுநர் மற்றும் கட்டளைத் தளபதி சகிதம் விவசாய மற்றும் விலங்கு வேளாண்மை பண்ணையை பார்வையிட்டார்.
மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பான வகையிலும் இப்பண்ணை செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அவர்கள் பாராட்டுத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’