வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

தனதும் சூசையினதும் மனைவி பிள்ளைகளின் விடுதலை தொடர்பாக உதவிபுரியும்படி சூசையின் சகோதரர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள்.

யுத்தம் அகோரமாக இடம்பெற்ற இறுதிச் சமயத்தில் படகு மூலம் தப்பிச் செல்லும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கூடவே கைது செய்யப்பட்ட தனது மனைவியையும் மகனையும் விடுவிப்பதற்கு விநயமாக உதவுமாறு கோரி முன்னாள் கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம்(16) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்குச் சென்று அமைச்சரவர்களை நேரடியாகச் சந்தித்த சூசையின் சகோதரரான பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம் தவராசா (வயது 61) இக்கோரிக்கையை முன்வைத்தார். இதுகுறித்து அமைச்சரவர்களிடம் மேலதிக தகவல்களைத் தெரிவித்த அவர் வன்னியில் யுத்தம் அகோரமாக இடம்பெற்றபோது தனது மனைவி சந்திராதேவி (வயது 60) மகன் சிலம்பரசன் (வயது 16) மற்றும் தனது சகோதரன் சிவநேசனின் (சூசை) மனைவி சத்தியதேவி (வயது 46) மகள் சிந்து (வயது 18) மகன் மணியரசன் (வயது 17) ஆகியோரை 2009.05.14 அன்று படகு மூலம் அனுப்பிவைத்துவிட்டு தான் ராணுவத்தினரிடம் சரணடைந்ததாக தெரிவித்தார். ராணுவத்தினர் தன்னை கௌரவமாக நடாத்தி செட்டிகுளம் நிவாரணக்கிராமத்தில் தங்கவைத்தபின் மீள்குடியேற்ற நடவடிக்கையின்போது யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்ததாக மேலும் தெரிவித்தார்.

படகு மூலம் சென்ற தனதும் சூசையினதும் குடும்பத்தவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் ஐவரையும் விடுவிப்பதற்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும் 61 வயதாகும் தன்னைக் கவனிப்பதற்கு உறவினர் எவரும் இல்லையெனவும் தனது மகனுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுத்து நல்ல நிலைக்கு கொண்டுவர தான் விருப்பமாக உள்ளதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தார். சிவலிங்கம் அவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கை அரசின் சட்டவரையறைக்குட்பட்டு தன்னால் இயலுமான உதவியை வழங்குவதாக அவருக்கு உறுதியளித்தார்.

ஏற்கனவே கடந்த 10ம் திகதி ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளர் ஐ.சிறிரங்கேஸ்வரனை வடமராட்சி தலைமைப்பணிமனையில் சந்தித்த சூசையின் சகோதரர் சிவலிங்கம் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தபோது ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்ப்பாணம் வந்தவுடன் அவரிடம் அக்கோரிக்கை தொடர்பாக தெரிவித்து அமைச்சரை நேரடியாகச் சந்திப்பதற்கு ஆவண செய்து தருவதாக வடமராட்சி ஈ.ப.pடி.பி அமைப்பாளர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’