வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

கைதானவர்களை விடுவிக்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்

மைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பேராதனை பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த போது மாணவர்கள் சிலர் முறையற்ற வகையில் நடந்துக் கொண்டதாகக் கூறி சந்தேகத்தின் பேரில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது
.பேராதனைப் பல்கலைக்கழக மாணவத் தலைவர்கள் நால்வரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள்.
இவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் ஒன்றியம் பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாணவர் ஒன்றியப் பேச்சாளர் உபுல் செனவிரட்ன தெரிவிக்கையில்,
"அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த போது அவரை மாணவர்கள் அடைத்து வைத்ததாக கூறி புதிய மாணவர்களுக்கான பகிடிவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு நான்கு பீடங்களைச் சேர்ந்த நான்கு மாணவத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் அமைச்சர் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவரல்லர். எனவே மாணவத் தலைவர்கள் நால்வரையும் பழி வாங்கும் நோக்கில் இவ்வாறு தவறான வகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, இவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நாம் கோரியுள்ளோம்" என்றார்.
அதேவேளை இக்கோரிக்கையை முன்வைத்து நேற்று பகல் பேராதனை பல்கலைக்கழக வீதியில் 500 மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’