வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஜனாதிபதியின் உரையை ஐ.தே.க. நிராகரிப்பு

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஐ.நா பொதுச் சபையின் ஆற்றப்பட்ட உரையை நிராகரித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் வறுமைத் தன்மையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது
.அபிவிருத்தியை நோக்கிய இலக்கானது தனிநபர் ஒருவரின் வருமானம் வறுமை நிலையை கருத்திற்கொண்டே எடுக்கப்பட வேண்டும். ஆனால் 2006/2007 ஆண்டுகளில் பெறப்பட்ட 17.2 வீதமான அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி தனது அபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுக்க முயல்கின்றார்.
இந்நிலையில் நாட்டின் நிலைமை மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் வறுமை நிலை இதன் போது கருத்திற் கொள்ளபட வில்லையென்று ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
வறுமை நிலையை போக்குவது என்பது குடிசன மதிப்பீட்டு ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும். முதலீடுகளின் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்பவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவாகவேக் காணப்படுகிறது.
இந்நிலையில் போசாக்கு இன்மையை நீக்குதல் மற்றும் நாளொன்றுக்கு இரு அமெரிக்க டொலர்களை வறுமானமாக பெரும் நாட்டின் உண்மை நிலை மற்றும் அபிவிருத்தியை நடத்திய பயணத்துக்கு வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’