வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

நகரசபைக் கூட்டம் இடை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக சபை உறுப்பினர்கள் போராட்டம்


வுனியா நகரசபை மாதாந்தக் கூட்டத்தை சபைத் தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தியமைக்கு  ஆட்சேபித்து சபை உறுப்பினர்கள் 10 பேரும் நகரசபை மைதானத்தில் கொளுத்தும் வெய்யிலிலும் சுமார் இரண்டு மணி நேரம் வாய்களை கறுப்புத் துணியினால் கட்டியவாறு  மைதானத்தின் நடுவில் அமர்த்திருந்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உப தலைவர் முகுந்தன் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களான எஸ்.சுரேந்திரன், எஸ்.சிவகுமார், இ.கனகையா புளொட் உறுப்பினர்களாக எதிர்க்கட்சி தலைவர் ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, பார்த்தீபன், பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் லலித் ஜெயசேகர, அப்துல்பாரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எல்.முனாபர்
ஆகிய பத்து சபை உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி தலைவரின் நடவடிக்கையினை ஆட்சேபித்து தாம் இந்தப் போராட்டத்தில் இறங்கியதாக குறிப்பிட்டனர்.
காலை சபைக் கூட்டம் நடைபெற்றபோது தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை வழிமொழியப்பட்டது.  அதையடுத்து தலைவர் கூட்டத்தை நிறுத்தி வைத்து வெளியேறினார்
நிகழ்ச்சி நிரலில் இல்லாத விடயங்கள் சபைக்கு கொண்டுவரப்பட்டது. அதனால்த் தான் கூட்டத்தை இடைநிறுத்தினேன் என நகரசபைத் தலைவர் ஜி.நாதன் தெரிவித்தார். நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆளுநருக்கு அறிவிக்கப் போவதாகவும் அவர் கூறினார். உபதலைவர்  ரதன் தெரிவிக்கையில், ஜனநாயக விரோதச் செயல் காரணமாக நகரசபை சீரழிந்து காணப்படுகின்றது. சபையின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்றார்.
கூட்டம் கூட்டப்பட்ட நோக்கத்திற்கு மாறாக தலைவர் செயல்பட்டார். அவரின்  தனிமனித  சர்வாதிகார போக்கை கண்டிக்கும் முகமாகவே நாம் கட்சி பேதமின்றி 10 உறுப்பினர்களும் எதிர்ப்பை வெளிகாட்டியுள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.
இந்நிலையில், மைதானத்திற்கு வருகை தந்த வன்னி எம்பிக்கள் சிவசக்தி ஆனந்தன் வினோநோகராதலிங்கம் ஆகியோர் சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று கட்சியின் தலைமைப் பீடத்திற்கு விடயத்தை தெரிவித்து அடுத்த மாதாந்த கூட்டத்திற்கு முன்னர் இதற்கான தீர்வுகள் முன்வைக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’